ஓடாமல் நின்ற கதை
ஒரு வேளை ஓடுவதை நிறுத்திவிட்டால்?
சற்றே நடந்து கடந்து தொலைந்து சென்றால்?
நடக்காமல், ஓடாமல், கடக்காமல், நகராமல். ஒரே இடத்தில் பாறை போல் ஆற்றில் மீன்களும், பாசியம், தண்ணீர் குடிக்க வந்த ஆடுகளும், ஆற்றில் குளிக்க வந்த காக்காக்களும், நாய்களும், விளையாடி மகிழும் சிறுவர்களும், விளைந்து வளைந்த புல் பூண்டுகளும், இதையெல்லாம் கண்டு வியந்த கல்லாய், தேய்ந்து கரைந்த மணலாய், ஆற்றில் அடித்து சென்றாலும், வேறில்லா போனாலும் ஆறில்லா போகாமல், அனைத்தையும் வியந்து கலைத்து ஒரு நாள் கடல் போய் சேர்ந்து சொல்வோமே,
ஓடாமல் நின்ற கதையை!

Comments
Post a Comment